கடையம் தெப்பக்குளத்தில் கழிவுகளை அகற்ற கோரிக்கை

கடையம் தெப்பக்குளத்தில் கழிவுகளை அகற்ற கோரிக்கை
X
தெப்பக்குளத்தில் கழிவுகளை அகற்ற கோரிக்கை
தென்காசி மாவட்டம் கடையம் நித்ய கல்யாணி அம்மன் கோவில் ஸ்ரீவிக்கிரம பாண்டியன் எனும் மன்னரால் 800 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தக் கோவிலை கட்டப்பட்டது. இக்கோவிலின் தெப்ப உற்சவத்திற்கென பிரத்யேக வடிவமைப்போடு ஒரு குளமும் இந்த கோயிலுக்கு வெட்டப்பட்டுள்ளது. தற்போது இந்த தெப்பக்குளத்தில் குளிக்க வரும் பொதுமக்கள் இதில் சோப்பு, ஷாம்பூ மற்றும் உணவு கழிவுகளை வீசி செல்கின்றனர். இந்தக் குளத்தில் கழிவுகளை விட்டுச் சென்றதால் துர்நாற்றம் வீசி வருகிறது உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து பார்வையிட்டு இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story