ராமநாதபுரம் ஒன்றிய அரசை கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது

ராமநாதபுரம் ஒன்றிய அரசை கண்டித்து  பொதுக்கூட்டம் நடைபெற்றது
X
முதுகுளத்தூரில் ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்ற தலைப்பில் அமைச்சர் தலைமையில் பொதுக்கூட்டம்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்நாடு வெல்லும், தமிழ்நாடு போராடும் என்ற தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டம் முதுகுளத்தூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினரும், பால்வளத்துறை அமைச்சருமான ராஜகண்ணப்பன் தலைமையில் சிறப்பு பேச்சாளர் கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி முன்னிலையில் நடைபெற்றது. விழாவில் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன் தமிழ்நாடு பாஜகவுக்கு வாக்களிக்காததால் தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் நிலை உள்ளது, ஹிந்தி மொழியை படிக்க வேண்டாம் என சொல்லவில்லை திணிக்க வேண்டாம் என சொல்கிறோம் இந்நிகழ்ச்சியில் திமுக மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் திமுக தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
Next Story