கடையம் அருகே கிணற்றில் விழுந்த கடமான் உயிருடன் மீட்பு

கடையம் அருகே கிணற்றில் விழுந்த கடமான் உயிருடன் மீட்பு
X
கிணற்றில் விழுந்த கடமான் உயிருடன் மீட்பு
தென்காசி மாவட்டம் கடையம் வனச்சரகம் கோவிந்தபேரி பீட்டிற்கு உட்பட்ட, மந்தியூரை சேர்ந்த ராமமூர்த்தி(ஓய்வு பெற்ற கிராம அஞ்சலக அலுவலர்) என்பவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் இன்று காலையில் தண்ணீர் தேடிச் சென்ற கடமான் ஒன்று கிணற்றில் தவறி விழுந்தது இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் கடையம் வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இது தொடர்ந்து தகவல் அறிந்த வனச்சரக அலுவலர் உத்தரவின்படி சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் கிணற்றில் தவறி விழுந்த கடமானை உயிருடன் மீட்டு கோவிந்தப்பேரி பீட் பகுதியில் பத்திரமாக விட்டனர். இத கண்டா அப்பகுதி விவசாயிகள் வனத்துறையினரை வெகுவாக பாராட்டினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story