ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் மாசிமக தீர்த்தவாரி நடைபெற்றது

ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில்  மாசிமக தீர்த்தவாரி நடைபெற்றது
X
ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் அன்பில் சுந்தர்ராஜப்பெருமாள் கோவில் உற்சவர் வடிவழகருக்கு மாசிமக தீர்த்தவாரி நடைபெற்றது.
108 வைணவ திருத்தலங்களில் உறையும் பெருமாள்களில் மூவருக்கு மட்டுமே அழகர் என்ற பெயர் வழங்கப்பட்டு வருகிறது. ஒருவர் திருமா லிருஞ்சோலை கள்ளழகர், மற்றொருவர் மதுரை கூடலழகர், மூன்றாம வர் திருச்சி அன்பில் வடிவழகர். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் சார்பு கோவிலான அன்பில் சுந்தர்ராஜப்பெருமாள் உற்சவரான வடிவழ கருக்கு ஆண்டுதோறும் மாசி மகத்தன்று ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற் றில் தீர்த்தவாரி நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான தீர்த்தவாரி நேற்று நடந்தது. இதற்கென அன்பில் சுந்தர்ராஜப்பெருமாள் உற்சவர் நேற்று அதிகாலை புறப்பட்டு உத்தமர் கோவில் மண்டபம் வந்து சேர்ந்தார். அங்கு அவருக்கு வர வேற்பு, திருவாராதனங்கள் நடந்தன. தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு கொள்ளிடம் ஆற்றின் தென்கரையில் அமைக்கப்பட்டிருந்த அலங்கார பந்தலில் எழுந்தருளினார். அங்கு அவ ருக்கு தீர்த்தவாரி மற்றும் சிறப்பு திருவாராதனங்கள் நடந்தன. இரவு வரை அங்கிருந்து பக்தர்களுக்கு சேவை சாதித்த சுந்தர்ராஜப்பெரு மாள் இரவு 11 மணியளவில் அன்பில் புறப்பட்டார். அன்பில் பெருமாள் தீர்த்தவாரி நிகழ்ச்சிகளை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரியப்பன், இருகோவில் அர்ச்சகர்கள், அலுவலர் கள், பணியாளர்கள் உள்ளிட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்த னர். மாசிமகத்தையொட்டி கறம்பனூர் எனப்படும் உத்தமர்கோவில் புரு ஷோத்தமபெருமாள் உற்சவர் நேற்று காலை தீர்த்தவாரிக்கென கொள் ளிடம் தென்கரை பந்தலில் எழந்தருளினார். அங்கு அவர் தீர்த்தவாரி கண்டருளினார்
Next Story