கோவை: ஆகாயத்தாமரைகளால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் !

X

கோவை வாலாங்குளத்தில் உள்ள படகு இல்லத்தில் ஆகாயத்தாமரைகள் அதிகளவில் வளர்ந்துள்ளதால், படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
கோவை வாலாங்குளத்தில் உள்ள படகு இல்லத்தில் ஆகாயத்தாமரைகள் அதிகளவில் வளர்ந்துள்ளதால், படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். வாலாங்குளத்தில் சமீபகாலமாக ஆகாயத்தாமரைகள் அதிகளவில் வளர்ந்து, குளம் முழுவதும் ஆக்கிரமித்துள்ளன. இதனால் படகு சவாரிக்கு இடையூறு ஏற்பட்டு, பாதுகாப்பு கருதி படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், வாலாங்குளத்தில் சாக்கடை கழிவுநீர் மற்றும் அரசு மருத்துவமனை கழிவுநீர் அதிகளவில் கலப்பதால் தண்ணீர் மாசடைந்து, ஆகாயத்தாமரைகள் வேகமாக வளர்வதாக கூறப்படுகிறது. ஆகாயத்தாமரைகளால் நீர்வாழ் உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. தண்ணீரில் ஆக்சிஜன் அளவு குறைந்து, மீன்கள் உள்ளிட்ட உயிரினங்கள் பாதிக்கப்படலாம். இதனையடுத்து, மாநகராட்சி நிர்வாகம் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணியை தொடங்கியுள்ளது. பொக்லைன் இயந்திரம் மூலம் ஆகாயத்தாமரைகள் அகற்றப்பட்டு வருகின்றன. எனினும், ஆகாயத்தாமரைகளை முழுமையாக அகற்ற வேண்டும் என்றும், ஒரு சிறிய தாவரம் இருந்தாலும் அது மீண்டும் வேகமாக வளரும் என்பதால், மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story