கோவை: நாய்க்கடி அலட்சியம் வேண்டாம் - டாக்டர்கள் எச்சரிக்கை !

கோவை: நாய்க்கடி அலட்சியம் வேண்டாம் - டாக்டர்கள் எச்சரிக்கை !
X
வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் கிடைத்தாலும் ரேபீஸ் நோய் பரவும்.
கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில், நாய் கடியால் பாதிக்கப்பட்ட ஒருவர் ரேபீஸ் தொற்று ஏற்பட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து மருத்துவர்கள் கூறுகையில், ரேபீஸ் நோய் என்பது, எந்த நாய் கடித்தாலும் ஏற்படும் என்று கூறமுடியாது. ரேபீஸ் வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட, நாய், ஆடு, மாடு, குதிரை, குரங்கு, பூனை, நரி, கீரி, ஓநாய், வவ்வால் போன்றவை கடித்தாலும், இப்பாதிப்பு ஏற்படலாம். இந்தியாவில் பெரும்பாலும், நாய்கள் மூலமாகவே மனிதர்களுக்கு இந்நோய் தொற்றுகிறது. நாய்க்கடியை அலட்சியமாக எடுத்துக்கொள்ள கூடாது. வளர்ப்பு நாயாகவே இருந்தாலும், முத்தம் கொடுப்பது, நக்குவதை அனுமதிக்கக்கூடாது. உரிய தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். நாய் கடித்தால், கட்டாயம் உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று இன்று எச்சரித்துள்ளனர்.
Next Story