மார்த்தாண்டம் அருகே விலை உயர்ந்த பைக் திருட்டு

X

வழக்கு பதிவு
மார்த்தாண்டம் அருகே வீயன்னூர் பகுதி படித்தரைவிளையை சேர்ந்தவர் விஜயேந்திர சிங்கன் (41). இவர் ஏசி மெக்கானிக்காக உள்ளார். நேற்று மதியம் காஞ்சிர கோடு பகுதிக்கு தனது விலை உயர்ந்த பைக்கில் சென்றுள்ளார். அப்போது அங்குள்ள ஒரு கார் ஒர்க் ஷாப் முன்பு பைக்கை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். சிறுநேரம் கழித்து திரும்பி வந்தபோது பைக்கை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் பைக்கை திருடி சென்றிருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து விஜயேந்திர சிங் கன் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் காணாமல் போன பைக்கை தேடுகின்றனர். மாயமான பைக்கின் மதிப்பு ரூ. 2 லட்சம் என்று குறிப்பிடத்தக்கது.
Next Story