ஈத்தங்காடு அருகே பைக் மோதி தொழிலாளி, சகோதரி காயம்

ஈத்தங்காடு அருகே பைக் மோதி தொழிலாளி, சகோதரி காயம்
X
வெள்ளிச்சந்தை
குமரி மாவட்டம் குமாரபுரத்தை சேர்ந்தவர் பிரேம்குமார் மகன் பிரதீப் (26). கூலி தொழிலாளி. இவரது சகோதரி நிஷா என்பவரின் கணவர் விபத்தில் காயமடைந்து நாகர்கோவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் நேற்று பிரதீப் தனது பைக்கில் நிஷாவை பைக்கில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிஷாவின் கணவரை பார்ப்பதற்காக நாகர்கோவில் நோக்கி புறப்பட்டார்.         ஈத்தங்காடு பகுதியில் சென்ற போது முன்னால் சென்ற அதே பகுதியை சேர்ந்த ராஜன் (43) என்பவர் எந்தவித சிக்னலும் காட்டாமல் திடீரென தனது பைக்கை வலது புறம் திருப்பினார். இதில் பிரதிப் ஓட்டி வந்த பைக் ராஜன் ஓட்டிய பைக் மீது மோதியது. இந்த விபத்தில் பிரதீப், நிஷா ஆகியோர் தூக்கி வீசப்பட்டதில் காயமடைந்தனர்.       அவர்கள் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்த புகாரின் பேரில் பைக்கை அஜாக்கிரதை ஒட்டிய ராஜன் மீது வெள்ளிச்சந்தை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story