மாசி மாத பௌர்ணமி: தலைமலை கிரிவலம் வரும் பக்தர்களுக்கு பழம் பெரும் நகைச்சுவை நடிகர் டிஎஸ் பாலையா பேரன் அன்னதானம் வழங்கினார்.!

அன்னதானம் வழங்கிய நடிகர் பாலையா பேரனின் குடும்பத்தினருக்கு தலைமலை சேவா டிரஸ்ட் சார்பில் பொன்னாடை அணிவித்து, தலைமலை சஞ்சீவிராய பெருமாள் புகைப்படத்தை கொடுத்தனர்.
தலைமலைக்கு மாதந்தோறும் பௌர்ணமி அன்று கிரிவலம் வருகிற பக்தர்களுக்கு, நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே உள்ள முட்டாஞ்செட்டி அடுத்த வரதராஜப்புரம் அடிவாரத்தில் தலைமலை சேவா டிரஸ்ட் மற்றும் நன்கொடையாளர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.இந்த மாசி மாத பௌர்ணமி தினம் (மார்ச்-13) வியாழக்கிழமை காலை 6 மணிக்கு ஆரம்பித்தது மதியம் 2 மணியளவில் கிரிவலத்தை முடித்தனர்.இதையடுத்து 67வது கிரிவலமாக அந்த ஊர் பொதுமக்கள் மற்றும் சுற்று வட்டாரத்தில் இருந்து சுமார்1000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் 27 கி.மீ கிரிவலம் நடந்து வந்தனர்.
அப்படி வரும் பக்தர்களுக்கு மறைந்த பழம் பெரும் நகைச்சுவை நடிகர் டிஎஸ் பாலையா மகள் வழி பேரன் பாலாஜி சக்திவேல் குடும்பத்தினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
மாசி மாத அன்னதானம் வழங்கிய நடிகர் பாலையா பேரனின் குடும்பத்தினருக்கு தலைமலை சேவா டிரஸ்ட் சார்பில் பொன்னாடை அணிவித்து, தலைமலை சஞ்சீவிராய பெருமாள் புகைப்படத்தை கொடுத்தனர். முன்னதாக காலை 11 மணியளவில் உலக மக்கள் அனைவரும் நலம் பெறவும்,நோய் நொடி இல்லாமல் அனைவரும் ஆரோக்கியமாக இருக்கவும்,விவசாயம் செழிக்கவும் சிறப்பு பூஜைகள் மற்றும் யாகம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தலைமலை சேவா டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் அக்னி ராஜேஷ்,சேவா டிரஸ்ட் அறங்காவலர்கள் பெ.கலைச்செல்வன்,ரா.சீனிவாசன், முன்னாள் எருமப்பட்டி பேரூராட்சி தலைவர் சிவராஜ், நாமக்கல் கண்ணன், வழக்கறிஞர் அகிலன் அறிவழகன், கலிங்கன், சேவா டிரஸ்ட் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் உடன் இருந்தனர்.
Next Story