கடன் கொடுக்க மறுத்தவரை கார் ஏற்றிக் கொல்ல  முயற்சி

கடன் கொடுக்க மறுத்தவரை கார் ஏற்றிக் கொல்ல  முயற்சி
X
கருங்கல்
குமரி மாவட்டம் கருங்கல் பகுதியை சேர்ந்தவர் ஜான் பீட்டர் (67) விவசாயி. பாலப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் பிரிட்டோ (52). கருங்கல் மரமாந்தபுரத்தை பிரிட்டோ (52). இவர்  பரமானந்தபுரத்தில் டிரேடர்ஸ் கடை நடத்தி வருகிறார். இதில் ஜான் பீட்டருக்கும் பிரிட்டோவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பழக்கத்தின் பேரில்  ரூபாய் 5 லட்சத்தை  ஜான் பீட்டரிடம் பிரிட்டோ கடன் கேட்டுள்ளார். அவர் கடன் கொடுக்கவில்லை.        இதனால் ஏற்பட்ட முன் விரோதத்தில் நேற்று காரில் வந்த பிரிட்டோ மற்றும் அஜயன் ஆகியோர் ஜான் பீட்டரை தடுத்து நிறுத்தி கார் ஏற்றி கொல்ல  முயற்சித்ததாக கூறப்படுகிறது.        இது குறித்து ஜான் பீட்டர் கருங்கல் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் பிரிட்டோ, அஜயன் ஆகியோர் மீது கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story