சட்டையம்புதூரில் மாரியம்மன் கோயில் திருவிழா


சட்டையம்புதூரில் மாரியம்மன் கோயில் திருவிழா
திருச்செங்கோடு சட்டையம்புதூர் அழகுமுத்து மாரியம்மன், முத்துக்குமாரசாமி, முக்கூட்டு விநாயகர் கோயில்களின் திருவிழா சென்ற வாரம் பூச்சாட்டுதலுடன் தொடங்கி தேர் இழுத்தல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. பண்டிகையானது கடந்த7ஆம் தேதி அழகு முத்து மாரியம்மனுக்கு கும்பம் மற்றும் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து முத்துக்குமரன் சாமிக்கு பூச்சாட்டுதல் நடத்தப்பட்டது. தினந்தோறும் சாமிகளுக்கு பல்வேறு அபிசேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன், முத்துக்குமரன் சுவாமிகள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். புதன்கிழமை தூக்குத்தேர், இழுப்புத்தேர் இழுத்து தேராட்டம் ஆடியபடி பக்தர்கள் ஊர் சுற்றி கோயிலை வந்தடைந்து சாமியை தரிசித்து வழிபட்டனர். திருவிழாவில் அக்னிசட்டி எடுத்தல், அலகு குத்துதல், அடிவிழுந்து கும்பிடுதல், வேடம் அணிதல், புலியாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு தேராட்டம் ஆடினர்.
Next Story