மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் பொதுக்கூட்டம்.

மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் பொதுக்கூட்டம்.
X
மத்திய அரசு கண்டித்து திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது
பரமத்திவேலூர், மார்ச்.12 நாமக்கல் மேற்கு 5 மாவட்டம் பரமத்தி வேலூர் தொகுதி தி.மு.க. பரமத்திவேலூர் அண்ணாசிலை அருகே திணிப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம், தொகுதி சீரமைப்பில் அநீதி செய்யும் மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் என்ற மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கே. எஸ். மூர்த்தி தலைமை வகித்தார் வேலூர் பேரூர் செயலாளர் முருகன் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் பரமத்தி தனராசு, கபிலர்மலை கே கே சண்முகம்,எலச்சிபாளையம் தங்கவேல், பொத்தனூர் கருணாநிதி,பேரூர் செயலாளருமான கருணாநிதி, பாண்டமங்கலம் பேரூராட்சி துணைத் தலைவரும் பேரூர் செயலாளருமான பெருமாள் என்கிற முருகவேல், பரமத்தி பேரூராட்சி துணைத் தலைவரும் பேரூர் செயலாளருமான ரமேஷ் பாபு, வெங்கரை பேரூர் செயலாளர் ராமலிங்கம், பேரூராட்சித் தலைவர்கள் பாண்டமங்கலம் சோமசேகர், பரமத்தி மணி, வேலூர் லட்சுமி முரளி, துணைத்தலைவர்கள் பொத்தனூர் அன்பரசு, வேலூர் ராஜா மற்றும் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பூக்கடை சுந்தர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் டாக்டர். மதிவேந்தன், வர்த்தகர் மாநில அணிச்செயலாளர் கவிஞர் காசி முத்துமாணிக்கம், தலைமை கழக பேச்சாளர் கோதை மதிவாணன், மற்றும் பரமத்தி சட்டமன்றத் வேலூர் தொகுதி பொறுப்பாளர் உமாராணி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். பொதுக்கூட்டம் முடிவில் நாமக்கல் மேற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மகிழ் பிரபாகரன் நன்றி கூறினார். கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளைக் கழக பொறுப்பா ளர்கள், பல்வேறு அணி பொறுப்பாளர்கள் மகளிர் அணி பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story