ராசிபுரம் ஸ்ரீ பெரியாண்டிச்சி அம்மன் கோவில் முப்பூசை விழா ஏராளமானோர் சாமி தரிசனம்..

ராசிபுரம் ஸ்ரீ பெரியாண்டிச்சி அம்மன் கோவில் முப்பூசை விழா ஏராளமானோர் சாமி தரிசனம்..
X
ராசிபுரம் ஸ்ரீ பெரியாண்டிச்சி அம்மன் கோவில் முப்பூசை விழா ஏராளமானோர் சாமி தரிசனம்..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சேலம் சாலை ஏரிக்கரை அருகே அமைந்துள்ள ஸ்ரீ பெரியாண்டிச்சி அம்மன் கோவிலில் முப்பூசை விழா நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் இருந்து பல்வேறு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடைபெற்று கோவில் பூசாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தார்கள், பக்தர்கள் என பலர் மேளதாளங்கள் முழங்க வான வேடிக்கையுடன் பூஜை பொருட்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று ஸ்ரீ பெரியாண்டிச்சி அம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்று பின்னர் மலர் அலங்காரங்கள் செய்து முப்பூசை திருவிழா சிறப்பாக நடைபெற்றது. மேலும் பெண்கள் பலர் பொங்கல் வைத்தும் வழிபட்டனர். ஆண்டுதோறும் திருவிழா நடைபெற்று சாமிக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிறப்பு பூஜையை கோவில் பூசாரிகள் செல்வம், சண்முகம், மணி, கணேசன், சீனிவாசன், கடற்கரை, ராஜா, யுவராஜ், மதியழகன், மற்றும் பூசாரிகள் பலர் செய்திருந்தனர்.
Next Story