சாத்தூரில் திமுக சார்பில் ஒரே இலக்கு தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் என்ற தலைப்பில் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

சாத்தூரில் திமுக சார்பில் ஒரே இலக்கு தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் என்ற தலைப்பில் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
X
சாத்தூரில் திமுக சார்பில் ஒரே இலக்கு தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் என்ற தலைப்பில் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக சார்பில் ஒரே இலக்கு தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் என்ற தலைப்பில் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே எஸ் எஸ்.ஆர் இராமச்சந்திரன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும் கண்டன பொதுக்கூட்டத்தின் போது வருவாய் துறை அமைச்சர் மற்றும் திமுக நிர்வாகிகள் பொது மக்கள் உள்பட அனைவரும் மத்திய அரசுக்கு எதிராக தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் என்ற தலைப்பில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பின்னர் கண்டன பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் இராமச்சந்திரன் இந்திய அரசின் அறிவுறுத்தலின் படி குடும்பக் கட்டுப்பாட்டை முறையாக கடை பிடித்ததால் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை குறைத்ததற்கு தண்டனையாக தமிழ்நாட்டில் உள்ள 39 எம்.பிக்களில் இருந்து 30 எம்பிக்களாக குறைக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என குற்றம்சாட்டினார். மேலும் பேசிய அமைச்சர் மக்கள் தொகை அடிப்படையில் எம்.பி க்களில் எண்ணிக்கையை குறைப்ப தாக சொல்லி திமுகவின் குரலை நாடாளுமன்றத்தில் நிறுத்த முயல்கிறார்கள் எனவும் நாடாளுமன்றத்தில் மோடியை எதிர்த்து பேசக்கூடிய தைரியமான கட்சி திமுக மட்டும் தான் என்றார். மேலும் பேசிய அமைச்சர் தென் இந்தியாவில் பாஜக வளர முடியாத காரணத்தினால் தொகுதி மறு சீரமைப்பு மூலம் வட இந்தியாவில் எளிதாக வெற்றி பெற பாஜக முயல்கிறது என விமர்சனம் செய்தார். மேலும் பேசிய அமைச்சர் கே.கே எஸ் எஸ்.ஆர் இராமச்சந்திரன் வட மாநில மாணவர்கள் இந்தி மட்டுமே படிப்பதால் தமிழகத்தில் வேலை பார்ப்பதாகவும் ஆனால் தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை மூலம் தமிழ் மற்றும் ஆங்கிலம் கற்றுக் கொண்ட நம்முடைய மாணவர்கள் வெளிநாடு களில் வேலை செய்கிறார்கள் என பேசினார். மேலும் பேசிய அமைச்சர் கே.கே எஸ் எஸ்.ஆர் இராமச்சந்திரன் மாணவர் கள் விருப்பப்பட்டு எந்த மொழியை வேண்டுமானாலும் படிக்கட்டும் எனவும் கட்டாயப்படுத்தி இந்தியை திணித்தால் நாங்கள் படிக்க மாட்டோம் என்றார். மேலும் தமிழகத்தில் இருந்து பெறப்படும் வரி வருவாயில் நம்முடைய பங்கை தான் தமிழகம் கேட்கிறது எனவும் அதனை மத்திய அரசு தர மறுக்கிறது என்றார்.
Next Story