எங்கள் பெரியாரை தந்தை பெரியார் என எப்படி நாடு முழுவதும் அழைக்கிறார்களோ அதைப்போல நம் அன்புமிகு முதல்வரை அப்பா என பிள்ளைகள் அழைக்கின்றனர்: சுப வீரபாண்டியன் பேச்சு

எங்கள்  பெரியாரை தந்தை பெரியார் என எப்படி நாடு முழுவதும் அழைக்கிறார்களோ அதைப்போல நம் அன்புமிகு முதல்வரை அப்பா என பிள்ளைகள் அழைக்கின்றனர்: சுப வீரபாண்டியன் பேச்சு
X
எங்கள் பெரியாரை தந்தை பெரியார் என எப்படி நாடு முழுவதும் அழைக்கிறார்களோ அதைப்போல நம் அன்புமிகு முதல்வரை அப்பா என பிள்ளைகள் அழைக்கின்றனர்: சுப வீரபாண்டியன் பேச்சு
இந்தி திணிப்பு,நிதிப் பகிர்வில் பாரபட்சம், தொகுதி மறு சீரமைப்பில் அநீதி செய்யும் ஒன்றிய அரசைக் கண்டித்து விருதுநகர் தேசபந்து மைதானத்தில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், விருதுநகர் நகர்மன்றத் தலைவர் மாதவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவர் திரு.சுப.வீர பாண்டியன் சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது, தமிழக மக்களின் போக்குணத்தை போர் குணத்தை பார்க்க வேண்டுமா என முதல்வர் ஏன் கூறினார் தெரியுமா தமிழ்நாடு மக்கள் தமிழை மொழியாக அல்ல உயிராக பார்க்கும் இயல்புடையவர்கள். இங்கு நின்று பேசுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு ஒருங்கிணைவு என்னவென்றால் . தமிழ்நாடு போராடும் என முதல்வர் சொன்னார். தமிழ்நாடு ‌என பெயர் பெற போராடி உயிர் நீத்த தியாகி சங்கரலிங்கனார் திடலில் நின்று பேசுகிறேன். இன்னொன்று தாளமுத்து இறந்து போனாரே மார்ச் 12 அந்த நாளில் பேசுகிறேன். இங்கே பக்கத்து மாவட்டம் மதுரையில் தோப்பூரில் எய்ம்ஸ் அறிவிக்கப்பட்டது வந்து விட்டதா வருமா 2015 ஆம் ஆண்டு அப்போது நிதியமைச்சர் அருண் ஜெட்லி 7 எய்ம்ஸ் மருத்துவமனைகளை அறிவித்தார். அதில் ஆறு வந்து விட்டன. இமாச்சலப் பிரதேசம் ஜம்மு காஷ்மீர் பஞ்சாப் என அறிவிக்கப்பட்ட ஆறு வந்துவிட்டது. ஆனால் நமக்கு வரவில்லை. 2019 ஆம் ஆண்டு மோடி அடிக்கல் நாட்டினார் வேலை துவங்கியது என சொன்னார்கள். வெற்று நிலமாக அல்லவா இருக்கிறது. உதயநிதி ஒரு செங்கலினால் அவர்களின் கட்டிடத்தை இடித்து நொறுக்கி விட்டார். மதிய உணவை காமராஜர் தந்தார் காலை உணவை நமது முதல்வர் தந்துள்ளார். திராவிட இயக்கத்தின் முன்னோடி கட்சியான நீதி கட்சியைச் சேர்ந்த தியாகராயர் 1922 ஆம் ஆண்டு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் மதிய உணவுத் திட்டத்தை துவக்கினார்.1925 ஆம் ஆண்டுஆங்கிலேய அரசு அதை மறுத்தது. மறுபடியும் போராடி மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார் பிறகு 30 ஆண்டுகள் கழித்து 1955 ல் காமராஜர் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார் ‌ இந்தியாவிலேயே காலை உணவு திட்டத்தை கொண்டு வந்தது நமது முதல்வர் தான். காலை உணவு ஏன்‌ அவசியம் தெரியுமா? நான் சொல்லவில்லை மருத்துவர்கள் சொல்கிறார்கள் காலை உணவு கட்டாயம் குழந்தைகளுக்கு தேவையான ஒன்று. காலை உணவை ஆங்கிலேயர்கள் டிபன் என சொல்வதில்லை பிரேக் பாஸ்ட் என சொல்கிறார்கள் ஏன் தெரியுமா? பாஸ்ட்டிங் என்பது விரதம் இரவு உணவுக்குப் பின் 12 மணி நேரம் விரதம் இருக்கிறோமே அதை உடைக்க வேண்டும். அதனால் பிரேக்ஃபாஸ்ட் என்று சொல்கிறார்கள். விவசாயிகளின் பிள்ளைகள் ஏழை குழந்தைகள் ஏதும் இல்லாதவர்கள் பசியோடு வகுப்பறையில் அமரக்கூடாது என்பதற்காக நமது முதல்வர் காலை உணவு வழங்குகிறார் . அதனால்தான் அப்பா என்கிறார்கள். எங்கள் பெரியாரை தந்தை பெரியார் என எப்படி நாடு முழுவதும் அழைக்கிறார்களோ அதைப்போல நம் அன்புமிகு முதல்வரை அப்பா என பிள்ளைகள் அழைக்கின்றனர். அது அடைமொழி அல்ல பாசத்தின் மொழி. 2022 செப்டம்பர் 15 துவங்கப்பட்ட போது 31,000 பள்ளிகளில் 17 லட்சம் குழந்தைகள் காலை உணவு திட்டத்தில் பயனடைந்தனர். தற்போது 39 ஆயிரம் பள்ளிகளில் 20 லட்சத்து 16 ஆயிரம் பிள்ளைகள் பயனடையின் அண்ணா என்றால் அது முதல்வர் கொண்டு வந்த திட்டம். புதுமை பெண் திட்டத்தில் உயர்கல்விக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க வழங்குகிறார். தங்கம் கொடுப்பதை நிறுத்தி விட்டதாக சொல்கிறார்கள் உண்மைதான் தங்கம் கொடுத்தால் அதை நாம் பாதுகாக்க வேண்டும் கல்வி கொடுத்தால் அது நம்மை பாதுகாக்கும். கல்விதான் நம் பிள்ளைகளை பாதுகாக்கும் கல்விதான் நம் பிள்ளைகளை தலை நிமிர்ந்து நிற்கச் செய்யும். இதையெல்லாம் செய்யாத ஒன்றிய அரசு இந்தி படிக்கச் சொல்கிறது. இந்தி படித்தவன் இங்கு வந்து கட்டிடத் தொழிலாளியாகவும் உணவகத்திலும் வேலை பார்க்கின்றார். நான் அவர்களை குறைவாக சொல்லவில்லை. உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் இருந்து வருகிறார்கள். அவர்களுக்கு இந்தி தெரியாதா. ஹிந்தி தெரியும் ஹிந்தி மட்டும் தான் தெரியும். அதனால் தான் அவர்கள் வாழ்க்கையில் முன்னேற முடியவில்லை. அறிஞர் அண்ணாவின் கொள்கையான இரண்டு முறை படித்ததால் தமிழர்கள் உலகம் முழுவதும் கொடிகட்டிப் பறக்கிறார்கள். அமெரிக்காவில் அனுமதிக்கப்பட்ட காலம் தாண்டி இருந்தவர்களை கை விலங்கு கால் விளங்கு போட்டு அனுப்பி வைக்கிறார்கள் . வெளியுறவுத்துறை அமைச்சர் என்ன சொல்கிறார் அது அவர்களது வழக்கம் என்ன பழக்கம் இது? வந்தவர்களில் பெரும்பாலும் குஜராத்திகள் அமித்ஷாவும் மோடியும் என்ன செய்கிறார்கள்? பிரதமர் என்ன செய்கிறார்? அங்கு சென்று அவர்களுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் தமிழக எம்பிக்கள் இது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினர் நீங்கள் வெட்கமில்லாமல் இருக்கலாம் இந்திய மக்கள் வெட்கப்படுகின்றனர் தமிழ்நாட்டு மக்கள் உணர்ச்சியோடு இருப்பதை எடுத்துக்காட்டுகின்றனர் இந்தியா போராடுகிறதோ இல்லையோ தமிழ்நாடு போராடும். தமிழ்நாடு அன்றைக்கும் இன்றைக்கும் கல்வியில் சிறந்து விளங்குகிறது. ராஜஸ்தானில் பீகாரில் உபியில் மும்மொழிக் கொள்கை உள்ளது. பீகாரில் பத்து நாட்களில் 420 பள்ளிகள் மூடியுள்ளனர் அங்கு போராட்டம் நடக்கிறது. சமஸ்கிருதத்தை இந்திய தூக்கிப் பிடிக்கிறார்கள். 2011 வது ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சமஸ்கிருதத்தை தாய்மொழியாக கொண்டவர்கள் 24861 பேர் என உங்கள் தரவுகள் தான் சொல்கிறது. தமிழகத்தில் 8 கோடிக்கு மேல். ஆனால் அந்த சமஸ்கிருத மொழிக்கு 25 ஆயிரம் கோடி வரை நிதியை கொட்டி கொடுக்கிறார்கள். 2.57 கோடி பேர் பேசும் ராஜஸ்தானி மொழி 22 மொழிகளின் அட்டவணையிலேயே இல்லை. சமஸ்கிருதத்தை அட்டவணையில் இருந்து தூக்குங்கள் ராஜஸ்தானியை அதில் வையுங்கள் எனக்கு கோரிக்கை விடுக்கிறோம். தமிழ் மண்ணுக்கு தேவையானதை நாங்கள் செய்து கொள்கிறோம். தமிழ் மண்ணின் போர்க்குணத்தை பார்க்க நேரம் என முதல்வர் சொன்னார். அந்த போர்க் குணத்தை மோடியும்,அமீத்ஷாவும் பார்க்க நேரிடும் தமிழ் எழும் போராடும் வெல்லும் இவ்வாறு அவர் பேசினார்
Next Story