மின்சார வாரிய அலுவலகத்தில் மின் கம்பியை திருடிய இருவர் கைது

குமாரபாளையம் அருகே மின்சார வாரிய கிடங்கின் பூட்டை உடைத்து மின் கம்பிகள் திருடிய இருவரை பொதுமக்கள் உதவியுடன் பிடித்து போலீசில் ஒப்படைப்பு.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள எதிர்மேடு பகுதியில் மின்சார வாரிய கிளை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த மின்சார வாரிய அலுவலகத்தின் உதவி பொறியாளர் வாமலை இன்று வழக்கம் போல் காலை பணிக்கு வரும்போது, மின்சார வாரிய அலுவலகத்தின் அருகிலுள்ள கிடங்குக்கு அருகே இருவர் இருசக்கர வாகனத்தில் மின்சார பெயர்களை வைத்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர்களை பிடிக்க முயற்சி செய்த பொழுது இருவரும் தங்களின் இருசக்கர வாகனத்தில் வேகமாக தப்பிக்க முயன்றனர். அப்பொழுது அதிகாரி கூச்சல் இட்டதை கண்டு அக்கம்பக்கம் வசிக்கும் பொது மக்கள், அந்த இரண்டு சக்கர வாகனத்தில் சென்றவர்களை மடக்கி பிடித்தனர். பின்னர் இருவரையும் குமாரபாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனை அடுத்து குமாரபாளையம் போலீசார் இருவரையும் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில், வட்டமலை பகுதியைச் சேர்ந்த ஜீவா மற்றும் வடிவேல் என தெரிய வந்தது. ஏற்கனவே வடிவேல் மின்சார வாரிய அலுவலகத்தில் மின்கம்பிகள் திருடிய வழக்கில் போலீசார் வழக்கு பதிவு செய்ததும் தெரியவந்தது. இருவரிடமும் போலீசார் விசாரணை செய்து வருவதுடன், அவர்கள் வந்த வாகனத்தையும் பறிமுதல் செய்து, மேலும் வேறு ஏதாவது திருட்டு வழக்குகள் இருவர் மீதும் உள்ளதா என தீவிர விசாரணை மேற்கொண்டதுடன் இரண்டு சக்கர வாகனம் பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்
Next Story