டியூசன் கட்டணத்துடன் தலைமறைவாகிய சிறுவர்களை மீட்ட போலீசார்

X
மதுரவாயல் அருகே டியூசன் கட்டணம் தலா 800 ரூபாயை எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து வெளியேறிய இரண்டு சிறுவர்களை போலீசார் மீட்டனர் பூந்தமல்லி அருகே மதுரவாயல் அருகே ஆலப்பாக்கம் தனலட்சுமி நகரைச் சேர்ந்த சிறுவர்கள் ஆல்வின் மற்றும் சுகன். 8ஆம் வகுப்பு படிக்கும் இவர்கள் இருவரும் நேற்றிரவு 800 ரூபாய் டியூசன் கட்டணத்தை எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து வெளியே சென்றனர். டியூசன் முடிந்தும் வீடு திரும்பாத சிறுவர்களை பெற்றோர் தேடிச் சென்றபோது இருவரும் காணவில்லை என தெரியவந்தது. இதையடுத்து மதுரவாயல் காவல்நிலையத்தில் புகார் அளித்த பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தேடிப்பார்த்தனர். போலீசாரும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இந்நிலையில் இன்று 12 மணியளவில் மதுரவாயல் பகுதியில் சுற்றித்திரிந்த 2 சிறுவர்களை பிடித்து காவல்நிலையம் அழைத்து வந்த போலீசார், அறிவுரை வழங்கி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். இரண்டு சிறுவர்களும் 800 ரூபாயை எடுத்துக்கொண்டு திருத்தணி சென்றதும், கையிலிருந்த பணம் தீர்ந்தவுடன் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு திரும்பியதும் விசாரணையில் தெரியவந்தது.
Next Story

