வீட்டுமனை பட்டா கேட்டு கோட்டை நோக்கி பயணம் தடுத்து நிறுத்திய போலீசார்

கோட்டை நோக்கி நடை பயணம் முதல்வரிடம் பட்டா கேட்டு மனு அளிக்க நடை பயணமாக சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்
திருவள்ளூர் கோட்டை நோக்கி நடை பயணம் முதல்வரிடம் பட்டா கேட்டு மனு அளிக்க நடை பயணமாக சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர் தமிழக அரசு தலையிட்டு உரிய பட்டா வழங்கிட நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்த பொதுமக்கள் திருவள்ளூர் மாவட்டம் நல்லூர் அலமாதி ஊராட்சியை சேர்ந்த 50 ஆண்டுகளாக தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி 1000க்கும் மேற்பட்டோர் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் பாதிக்கப்பட்ட அவர்கள் தமிழக முதலமைச்சரிடம் மனு அளிக்க அனைவரிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை மூட்டை கட்டி கொண்டு கோட்டையை நோக்கி நடை பயணமாக சென்று மனு அளிக்கும் போராட்டத்தை அறிவித்ததை தொடர்ந்து அங்கு வந்த சோழவரம் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி வருவாய்த் துறையினர் மூலம் சமரசம் மேற்கொண்டு பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு கலைந்து சென்றனர். அரசு தலையிட்டு பட்ஜெட் கூட்டத் தொடரில் வீட்டுமனை பட்டா வழங்க உரிய அறிவிப்பு வெளியிட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
Next Story