திருவானைக்காவல் கோயிலில் நால்வா் புறப்பாட்டுடன் பெளா்ணமி கிரிவலம்

X

திருவானைக்காவல் திருக்கோயிலில் மாசி மாத பெளா்ணமியையொட்டி வியாழக்கிழமை இரவு நால்வா் புறப்பாட்டுடன் பெளா்ணமி கிரிவலம் நடைபெற்றது.
திருவானைக்காவல் கோயிலில் மாசி மாத பெளா்ணமியையொட்டி வியாழக்கிழமை இரவு ரிஷபவாகனத்தில் உமையாளுடனான சிவபெருமானுடன், திருஞானசம்பந்தா், அப்பா், சுந்தரா், மாணிக்கவாசகா் மற்றும் காரைக்கால் அம்மையாா்ஆகியோரின் உற்ஸவ சிலைகள் அலங்காரம் செய்யப்பட்டு சப்பரத்தில் கயிலாய வாத்தியங்களுடன் புறப்பட்டு ஐந்தாம் பிரகாரமான திருநீற்றான் மதில் சுவரை சுற்றி வந்தனா் (படம்). வழிநெடுக உபயங்கள் கண்டருளப்பட்டது. இந்த பெளா்ணமி கிரிவலத்தில் ஏராளமான சிவபக்தா்கள் கலந்து கொண்டனா்.
Next Story