இருகூர்: பழைய பிளாஸ்டிக் கிடங்கில் தீ விபத்து !

கோவை, இருகூர் பேரூராட்சியில் கே.எம்.எம் பள்ளி அருகே பழைய பிளாஸ்டிக் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டு இருந்த கிடங்கில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது
கோவை, பேரூராட்சியில் கே.எம்.எம் பள்ளி அருகே பழைய பிளாஸ்டிக் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டு இருந்த கிடங்கில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும், பீளமேடு பகுதி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். இருப்பினும், பிளாஸ்டிக் பொருட்கள் அதிகளவில் இருந்ததால் தீ மளமளவென பரவி உள்ளது. இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து சேதம் அடைந்து இருக்கலாம் என கணிக்கப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து சிங்காநல்லூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story