பண்ணந்தூர் கிராமத்தில் மின்சாரம் தாக்கி பசு மாடு உயிரிழப்பு.

பண்ணந்தூர் கிராமத்தில் மின்சாரம் தாக்கி பசு மாடு உயிரிழப்பு.
X
பண்ணந்தூர் கிராமத்தில் மின்சாரம் தாக்கி பசு மாடு உயிரிழப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பண்ணந்தூர் கிராமத்தை சேர்ந்த சின்னகண்ணு. இவருடைய மனைவி கிளியம்மாள். இவர் கறவை மாடுகள் வளர்த்து வந்தருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை பண்ணந்தூரில் திடீரென மழை பெய்தது. இந்த நிலையில் மேய்ச்சலுக்கு அழைத்து சென்ற ஒரு பசுமாட்டை கிளியம்மாள் வீட்டிற்கு அழைத்து வந்த போது மாட்டின் வால்பகுதி அருகில் இருந்த மின்கம்பியின் மீது பட்டது இதனால் மாட்டின் மீது மின்சாரம் தாக்கியதில் துடிதுடித்து உயிரிழந்தது. இது குறித்து பாரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story