பாலாற்று படுகைகளில் இரை தேடும் பறவைகள்

பாலாற்று படுகைகளில் இரை தேடும் பறவைகள்
X
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பாலாற்று படுக்கைகளில் இறைத்தேடி வரும் பறவைகள்
காஞ்சிபுரம் மாவட்டத்தின் பாலாற்றில் பழையசீவரம், செய்யாற்றில் வெங்கச்சேரியும் தவிர மற்ற பகுதிகளில் தடுப்பணை இல்லாததால், ஆண்டுதோறும் பருவ மழைக்காலத்தின் போது ஆற்றில் வரும் தண்ணீர் தேக்கி வைக்கப்படாமல் வீணாகிறது.விரைவில் கோடைக்காலம் துவங்க உள்ள நிலையில், தண்ணீர் வற்றி வருகிறது.இந்நிலையில், திருமுக்கூடல், பழவேரி, பினாயூர் பாலாற்று நீரோடைகளில் ஆங்காங்கே உள்ள தண்ணீர் தேக்க பகுதிகளில், பல வகையான பறவைகள் தினமும் வந்து தண்ணீர் குடிப்பதோடு, மீன், புழுக்கள் போன்ற இரைகளை தேடுகின்றன. சின்ன நாரை, நீர்க்கோழி உள்ளிட்ட பறவைகள் இப்பகுதி பாலாற்று தடுப்பணை மற்றும் நீரோடைகளில் நாள் முழுதும் காண முடிகிறது.
Next Story