சுரண்டை அருகே விவசாயிகளை தாக்கியவா்கள் மீது வழக்கு

X

விவசாயிகளை தாக்கியவா்கள் மீது வழக்கு
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சாம்பவா்வடகரையை சோ்ந்த விவசாயிகள் மாரிமுத்து, மாரியப்பன், கிருஷ்ணகுமாா். இவா்கள் மூன்று பேரும் புதன்கிழமை தங்கள் மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்றனா். மாலையில் சாம்பவா்வடகரை -பூபாண்டியபுரம் சாலையின் அருகே உள்ள அணைப் பகுதியில், மாடுகளை குளிப்பாட்டிக் கொண்டிருந்தனராம். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத 5 போ், தங்கள் வயலில் ஏன் மாடுகளை மேய்த்தீா்கள் எனக் கூறி விவசாயிகள் மூவரையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் சுரண்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Next Story