ஹோலி பண்டிகை

ஹோலி பண்டிகை
X
இன்று ஹோலி பண்டிகை ஈரோட்டில் வட மாநிலத்தவர்கள் உற்சாக கொண்டாட்டம்
வடமாநிலங்களில் ஹோலி பண்டிகை மிக முக்கிய பண்டியாக உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் ஒருவருக்கு ஒருவர் கலர் வண்ணப் பொடிகளை முகத்தில் தூவி ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டாடி வருகின்றனர். இன்று வட மாநிலங்களில் ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி ஈரோடு மாவட்டத்தில் ஏராளமான வட மாநிலத்தவர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். அவர்கள் இன்று ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். ஈரோடு மாநகர் பகுதியில் என் எஸ் எம் காம்பவுண்ட், புது மஜித் வீதி, ஜின்னா வீதி, கருங்கல்பாளையம் பகுதியில் ஆயிரக்கணக்கான வட மாநிலத்தவர்கள் வசித்து வருகின்றனர். ஹோலி பண்டிகை முன்னிட்டு இன்று காலை முதலே அவர்கள் ஒருவருக்கொருவர் கலர் வண்ணக் பொடிகளை முகத்தில் தூவி , கலர் சாயங்களை தண்ணீராக முகத்தில் அடித்து மகிழ்ச்சியாக கொண்டாடினர். மேலும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
Next Story