நடுரோட்டில் நர்சுக்கு கட்டாய தாலி கட்ட முயன்ற வாலிபர்

X

நாகர்கோவில்
கன்னியாகுமரியை சேர்ந்த 21 வயது இளம் பெண் ஒருவர் நாகர்கோவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார். இவரும் தெற்கு சூரங்குடியை சேர்ந்த வாலிபர் ஒருவரும் காதலித்து வந்தனர். தற்போது பிரச்சனை ஏற்பட்டு பெண் காதலை துண்டித்தார். இதன் பின்னர் அந்த பொண் வேறொரு வாலிபருடன் காதல் ஏற்பட்டு, அவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, திருமண ஏற்பாடுகளும் தற்போது நடந்து வந்தன. இதை அறிந்த பழைய காதலன் நேற்று 13-ம் தேதி இரவு அந்தப் பெண் இரவு பணிக்காக நாகர்கோவில் ஆஸ்பத்திரி அருகே சாலையில் நடந்து செல்லும் போது கோட்டாறு பகுதியில் வைத்து இளம் பெண்ணை பழைய காதலன் சில நண்பர்களுடன் வந்து வழிமறித்து தடுத்து நிறுத்தி அவருக்கு கட்டாய தாலி கட்ட முயற்சி செய்துள்ளார். சத்தம் கேட்டு பொதுமக்கள் அந்த பகுதியில் கூடியதும் இளம் பெண்ணை சூழ்ந்து என்ற வாலிபர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். பின்னர் இந்த சம்பவம் குறித்து கோட்டார் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இளம் பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். தொடர்ந்து கட்டாயத் தாலி கட்ட முயன்ற வாலிபர் மற்றும் அவருடன் வந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story