மருங்கூர் லாரி டிரைவர் கொலையில் நண்பர் கைது

மருங்கூர்  லாரி டிரைவர் கொலையில் நண்பர் கைது
X
கன்னியாகுமரி
குமரி மாவட்டம் மருங்கூர் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (32) லாரி டிரைவர். இவருக்கு திருமணம் ஆகவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்பு மயிலாடி பகுதியில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்து கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட தகராறில் ராஜாவூர் பகுதி சேர்ந்த விக்னேஷ் (34) என்பவர் ஈஸ்வரனை அரிவாளால்  வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டார்.      இதில் ஈஸ்வரன் உயிரிழந்தார். இது தொடர்பாக அஞ்சு கிராமம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளியை  தேடி வந்தனர். இதில் விக்னேஷ் மீது ஏற்கனவே பல வழக்குகள் இருந்ததாக தெரிய வந்தது.        இந்த நிலையில் இந்த நிலையில் நேற்று மதியம் ரவிபுதூர் பகுதியில் ஒரு சுடுகாட்டில் பதுங்கி இருந்த விக்னேஷை போலீசார் கைது செய்தனர். அவரை கைது செய்து விசாரித்ததில், போதையில் இருந்த போது ஆத்திரத்தில் கொலை செய்ததாக கூறினார்.
Next Story