சோளிங்கர் பேருந்து நிலையத்தில் பழைய கட்டிடங்கள் அகற்றம்!

சோளிங்கர் பேருந்து  நிலையத்தில் பழைய கட்டிடங்கள் அகற்றம்!
X
பேருந்து நிலையத்தில் பழைய கட்டிடங்கள் அகற்றம்
சோளிங்கர் பேருந்து நிலைய விரிவாக்க பணிக்காக பழைய கட்டிடங்களை இடித்து அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இத னால் பஸ்கள் வந்து செல்லமாற்றுப்பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது.சோளிங்கர் பஸ் நிலையத்தில் கலைஞர் நகப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.4 கோடியே 64 லட்சம் மதிப்பில் விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக முதற்கட்டமாக பஸ் நிலையத்தில் உள்ள பழைய கட்டிடங்களை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நகராட்சி பணி மேற்பார்வையாளர் ஆனந்தன் மேற்பார்வையில், பொதுமக்கள், பஸ் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில்,பேருந்து நிலையத்துக்கு பஸ்கள் வந்து செல்வதற்காக மாற்றுப் பாதை ஏற்படுத்தப்பட்டது.கட்டுமான பணிகள் முடியும் வரை இந்த மாற்று பாதையில் பஸ்கள் சென்று வரும் என தெரிவித்தனர். நகராட்சி கவுன்சிலர் கள் அசோகன், ராதா வெங்கடேசன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
Next Story