ஆற்காட்டில் தி.மு.க சார்பில் பொதுக்கூட்டம்

ஆற்காட்டில் தி.மு.க சார்பில் பொதுக்கூட்டம்
X
மத்திய அரசை கண்டித்து தி.மு.க சார்பில் பொதுக்கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆற்காடு பேருந்து நிலையத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சருமான ஆர்.காந்தி தலைமை தாங்கினார். ஆற்காடு நகர நிர்வாகிகள் பி.என்.எஸ்.ராஜசேகரன், பொன்.ராஜசேகர், கஜேந்திரன், சொக்கலிங்கம், ரவிக்குமார், ருக்மணி, சிவா, கோபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் ஏ.வி.சரவணன் வரவேற்றார். திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான எ.வ.வேலு, கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து பேசினார். இதில் ஆற்காடு ஜெ.எல்.ஈஸ் வரப்பன் எம்.எல்.ஏ., மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி, தலைமை கழக பேச்சாளர் ரவிசந்திரன், மாவட்ட அவைதலைவர் ஏ.கே.சுந்தரமூர்த்தி, மாவட்ட பொருளாளர் ஏ.வி.சாரதி, மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் பி.என்.எஸ். சரவணன், ஆற்காடு நகரமன்ற தலைவர் தேவி பென்ஸ்பாண்டியன், ஒன்றியக்குழு தலைவர் புவ னேஸ்வரி சத்தியநாதன் மற்றும் மாவட்ட நகர, ஒன்றிய நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story