சேலம் கிழக்கு கோட்டம் சார்பில் அஞ்சல் வாடிக்கையாளர்கள் குறைதீர்க்கும் கூட்டம்

X
சேலம் கிழக்கு கோட்ட அஞ்சல் முதுநிலை கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சேலம் கிழக்கு அஞ்சல் கோட்டம் சார்பில் வாடிக்கையாளர்கள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 21-ந் தேதி கிழக்கு கோட்ட அலுவலகத்தில் நடைபெறுகிறது. கூட்டத்தில் அஞ்சல் வாடிக்கையாளர்கள் தங்களது புகார்களை சேலம் கிழக்கு கோட்ட அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் என்ற முகவரிக்கு அனுப்பலாம். தங்களது புகார்களை வருகிற 18-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். எனவே, இந்த குறைதீர்க்கும் கூட்டத்தை அஞ்சல் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story

