தேர்தலில் அறிவித்த வாக்குறுதியை நிறைவேற்றிட வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

தேர்தலில் அறிவித்த வாக்குறுதியை நிறைவேற்றிட வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
கரூரில், தமிழக சட்டமன்றத் தேர்தலில் அறிவித்த வாக்குறுதியை நிறைவேற்றிட வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாவட்ட மையத்தின் சார்பில், மாநில செயற்குழுவில் மேற்கொள்ளப்பட்ட முடிவின்படி, தமிழக முதலமைச்சர் சட்டமன்ற தேர்தலில் அறிவித்த வாக்குறுதி எண் 313-ஐ நிறைவேற்றிட வலியுறுத்தி, இன்று மாவட்ட தலைநகரங்களில் தமிழக முழுவதும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு, மாவட்ட தலைவர் மாரிமுத்து தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் சரஸ்வதி, மாவட்ட செயலாளர் வாசுகி, மற்றும் அன்புமணி, பழனி, கணேசன், காமாட்சி உள்ளிட்டோர் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினர். மேலும் முன்னாள் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் மகாவிஷ்ணன் துவக்க உரை நிகழ்த்தினார். போராட்டத்தின் போது 2021 சட்டமன்ற தேர்தலில் அறிவித்த வாக்குறுதியை நிறைவேற்றிட வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
Next Story