கந்திலி கலை கல்லூரி மாணவ மாணவியர் களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கந்திலி கலை கல்லூரி மாணவ மாணவியர் களுக்கு காவல் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அரசு கலை கல்லூரியில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு காவல்துறை சார்பில் அனைத்து சமூக மக்களின் நல்லிணக்க விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காவல்துறை சார்பில்அனைத்து சமூக மக்களின் நல்லிணக்க விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி கல்லூரி மாணவ மாணவியர் இடையே நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் 300 க் கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர் காவல்துறை சார்பில் பங்கேற்று பேசிய போது அனைவரும் ஜாதி மத வேதமற்ற சகோதர மணப்பான்மை மற்றும் நல்லிணக்கத்துடன் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் சமத்துவ மயானம் அனைத்து சமுதாயத்தினருக்கும் ஒரே மயானம் கடைபிடிக்கும் கிராமங்களுக்கு ஒரு மாவட்டத்திற்கு 3 கிராமங்கள் வீதம் தலா 10 லட்சம் பரிசு தொகை வழங்கப்படுகிறது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்ட கிராமப்புறங்களில் 3 சென்ட் நிலமும் நகர்புறங்களில்1.5 நிலமும் வழங்கப்பட்டு வீடு கட்ட மானியத்தில் 72,000 ஆயிரம் வழங்கப்படும் வன் கொடுமையால் பாதிக்கப்பட்டவருக்கு தீருதவி தொகை வழங்கப்படுகிறது பெண் கல்வி ஊக்கவிப்பு திட்டம் பள்ளி மாணவர்களுக்கு காலை மதிய உணவு திட்டம் போஸ்ட் மெட்ரிக் உதவி தொகை திட்டம் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது உள்ளிட்டவைகளை குறித்து உரையாற்றினார் இறுதியில் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி யில் சமத்துவம் தழைக்க சாதி ஏற்ற தாழ்வுகளை களைவோம் சமூக நீதியை காக்க தீண்டாமையை நீக்குவோம், தீண்டாமை என்னும் கொடிய நோயை ஒழிப்போம் தீண்டாமை என்னும் அரக்கனை ஒழிப்போம் வன்கொடுமையை விளக்கி வாழ்வில் ஏற்றம் பெறுவோம், சமூக நீதி நிலைநாட்ட சகோதரத்துவத்துடன் ஒன்றிணைவோம், சக மனிதர்களை சாதியின் பெயரால் ஒரு போதும் அடையாளம் கானமாட்டோம் உள்ளிட்டவைகளை குறித்து உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்
Next Story