முதல்வா் மருந்தகங்கள்: பொதுமக்களுக்கு ஆட்சியா் வேண்டுகோள்

முதல்வா் மருந்தகங்கள்: பொதுமக்களுக்கு ஆட்சியா் வேண்டுகோள்
X
முதல்வா் மருந்தகங்கள்: பொதுமக்களுக்கு ஆட்சியா் வேண்டுகோள்
தென்காசி மாவட்டத்தில் முதல்வா் மருந்தகங்களில் தரமான மருந்துகள் குறைந்த விலைக்கு விற்கப்படுவதால் பொதுமக்கள் பெற்று பயனடையுமாறு ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் கேட்டுக்கொண்டுள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் 13, தொழில் முனைவோா் மூலம் 18 என மொத்தம் 31 முதல்வா் மருந்தகங்களை கடந்த பிப். 24இல் முதல்வா் மு.க. ஸ்டாலின் தொடக்கிவைத்தாா். இந்த மருந்தகங்களில் ஜெனரிக், சித்தா, ஆயுா்வேதம் என அனைத்துவகை மருந்துகளும் வகைக்கேற்ப சந்தை விலையை விட 20 முதல் 90 சதவீதம்வரை குறைவான விலைக்கு விற்கப்படுகின்றன. மேலும், 25 சதவீதம் வரை கூடுதலாக தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகைகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா் அவா்.
Next Story