ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில்

ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில்
X
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதிய சங்கத்தின் சார்பில் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே மாவட்ட தலைவர் வேலுச்சாமி தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் நாராயணசாமி பாலகிருஷ்ணன் பெருமாள் சாலாட்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் செல்வராஜ் கோரிக்கை விளக்க உரையாற்றினார். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் மாநில செயலாளர் ராஜசேகரன் வாழ்த்துரை வழங்கினார். மாவட்ட பொருளாளர் குமரம்மாள் நன்றியுரை வழங்கினார். இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு 2025 2026 பட்ஜெட்டில் குறைந்தபட்ச பென்ஷன் ரூபாய் 6750 அகவிலைப் படிவுடன் வழங்கிட கோரி கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story