இரவில் அரசு பஸ் கண்டக்டரை குத்த முயன்ற வாலிபர் கைது

X

குளச்சல்
குமரி மாவட்டம் பாலப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் தாணுதாஸ் (37). இவர் திங்கள் நகர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் தற்காலிக நடத்துனராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் பணிக்கு சென்றுவிட்டு, பணி முடிந்து அங்கிருந்து தனது பைக்கில் வீட்டிற்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். அஞ்சாலி திருப்பு என்ற பகுதியில் வரும் போது சாலை மறித்தபடி கார் நின்றதால் ஹாரன் அடித்துள்ளார். அப்போது அந்த காரிலிருந்து இறங்கிய வாலிபர் தாணு தாசிடம் தகராறு செய்து கத்தியால் அவரை குத்த முன்று உள்ளார். உடனடியாக பைக்கை எடுத்துக்கொண்டு தாணுதாஸ் சென்றுள்ளார். ஆனால் அந்த வாலிபர் காரில் ஏறி பைக்கை பின் தொடர்ந்து பைக்கில் மோத முயன்றார். இதில் நிலை தடுமாறி பைக் ஓடையில் விழுந்தது. இதை அடுத்து அந்த கார் அங்கிருந்து மின்னல் வேகத்தில் மறைந்து சென்றுள்ளது. இது தொடர்பாக தாணுதாஸ் குளச்சல் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி பெத்தேல்புரம் பகுதியைச் சேர்ந்த அனிஷ் (34) என்பவரை இன்று கைது செய்தனர். அனிஷ் அந்த பகுதியில் கோழி கடை நடத்தி வருவதாக தெரிய வந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story