கே.எஸ்.ஆர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி - திருச்செங்கோடு இரண்டு நாள் பயிற்சி பட்டறை

X
கே. எஸ். ஆர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேதியியல் துறை சார்பில் இந்திய தேசிய அறிவியல் நிறுவனம், பெங்களூர் நிதியுதவியுடன் வேதியியல் துறையில் சமிபத்திய முன்னேற்றங்கள்" என்னும் தலைப்பில் 13.3. 2024 &14.03.2025 இரண்டு நாள் பயிற்சி பட்டறை நடைபெற்றது. இந்நிகழ்வு கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் திரு. சீனிவாசன், துணை தாளாளர் கே.எஸ்.சச்சின் அவர்களின் வாழ்த்துகளோடு தொடங்கப்பட்டது. கல்லூரியின் முதல்வர் முனைவர் மா. கார்த்திகேயன் வரவேற்புரை வழங்கினார். கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் பேராசிரியர் வெ.மோகன் வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்வில் பேராசிரியர் முனைவர் ஆர். ராமராஜ் மதுரை காமராஜ் பல்கலைக்கழகம்,பேராசிரியர் முனைவர் நடராஜன் இந்திய அறிவியல் கழகம் பெங்களூர், பேராசிரியர் முனைவர் ஏ.கே மிஷ்ரா இந்திய தொழில்நுட்ப நிறுவனம், சென்னை. பேராசிரியர் வி.சுப்பிரமணியன் இந்திய தொழில்நுட்ப நிறுவனம், சென்னை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். முதல் நாள் நிகழ்வில் நான்கு அமர்வுகள் நடைபெற்றது. முதல் மற்றும் இரண்டாம் அமர்வு பேராசிரியர் முனைவர் ஏ.கே மிஷ்ரா அவர்கள் ஃப்ளோரசன்ஸ் ஸ்பெக்ட்ரோஸ்கோபியின் அடிப்படைகள், ஒளி இயற்பியல் வேதியியலின் அடிப்படைகள் என்ற தலைப்பில் விரிவுரையாற்றினார். பேராசிரியர் முனைவர் எஸ் நடராஜன் அவர்கள் MOFகளைப் பயன்படுத்தி பன்முகத்தன்மை கொண்ட வினையூக்கம், எக்ஸ்-கதிர் படிகவியலின் அடிப்படைகள் என்ற தலைப்பில் விரிவுரையாற்றினார். இரண்டாம் நாள் நிகழ்வில் நான்கு அமர்வுகள் நடைபெற்றது. பேராசிரியர் முனைவர் ஆர். ராமராஜ் அவர்கள் நானோ அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்பம், செயற்கை ஒளிச்சேர்க்கை மற்றும் சூரிய ஆற்றல் மாற்றம் என்ற தலைப்பில் விரிவுரையாற்றினார். பேராசிரியர் வி. சுப்பிரமணியன் அவர்கள் மூலக்கூறு மாதிரியாக்கம் மற்றும் உருவகப்படுத்துதல்கள், நானோ பொருட்கள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் என்ற தலைப்பில் விரிவுரையாற்றினார். வேதியியல் துறை தலைவர் முனைவர் கந்தசாமி நன்றியுரை வழங்கினார். இந்த நிகழ்வில் 150 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
Next Story

