சி கூடலூர் அருகே டூ வீலரில் வேகமாக சென்றபோது வேகத்தடையில் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்து. ஒருவர் படுகாயம்.

சி கூடலூர் அருகே டூ வீலரில் வேகமாக சென்றபோது வேகத்தடையில் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்து. ஒருவர் படுகாயம்.
சி கூடலூர் அருகே டூ வீலரில் வேகமாக சென்றபோது வேகத்தடையில் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்து. ஒருவர் படுகாயம். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுக்கா பள்ளப்பட்டி தைக்கால் தெருவை சேர்ந்தவர் பிச்சை முகமது வயது 60 இவரது நண்பர் அதே பகுதியைச் சேர்ந்த சாகுல் ஹமீது வயது 55. இருவரும் மார்ச் 11ஆம் தேதி இரவு 7 மணி அளவில் தென்னிலையில் இருந்து சின்ன தாராபுரம் செல்லும் சாலையில் அவர்களது டூவீலரில் சென்று கொண்டு இருந்தனர் பிச்சை முகமது டூவீலரை ஓட்டிச் சென்றார் இவர்களது வாகனம் செய்ய கூடலூர் ஈஸ்வரன் கோவில் அருகே வேகமாக சென்றபோது அப்பகுதியில் அமைக்கப்பட்ட ஸ்பீடு பிரேக்கரில் நிலைத்தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டதால் அவர்களை மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக சாகுல் அமீது அளித்த புகாரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை வேகமாகவும்,அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய பிச்சை முகமது மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் சின்ன தாராபுரம் காவல் துறையினர்.
Next Story