ஜோலார்பேட்டை ரயில்வே நிலையத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது

X

ஜோலார்பேட்டை ரயில்வே நிலையத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில்வே நிலையத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில்வே நிலையத்தில் இருப்புப் பாதை காவல் ஆய்வாளர் சித்ரா தலைமையில் பெண்கள் பயணிகள் பாதுகாப்பு குழு சார்பாக விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. அதில் ரயிலில் பயணம் பெண்கள் தனியாக பயணம் செய்ய வேண்டாம் என்றும் பெண் பயணிகளுக்கு ஒவ்வொருவருக்கும் காவலன் உதவி செயலி பற்றியும் எடுத்துரைத்து அதன் செயலியை மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து கொடுத்தனர். மேலும் பெண்கள் பெட்டியில் ஆண்கள் எவரேனும் ஏறினால் மற்றும் ரயிலில் பயணிக்கும் போது பெண்களுக்கு வேறு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் உடனடியாக ரயில்வே காவல் உதவி எண்கள்- 1512 மற்றும் 9962500500 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிப்பதன் மூலம் தங்களுக்கு காவலர்கள் உதவி விரைவாக கிடைக்கும் என்றும் பேனர் வைத்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது
Next Story