பூர்விகா மொபைல் ஷோரூமின் பணியாளர்கள் மீது காவல் நிலையத்தில் புகார்

பூர்விகா மொபைல் ஷோரூமின் பணியாளர்கள் மீது காவல் நிலையத்தில் புகார்
X
பூர்விகா மொபைல் ஷோரூமின் பணியாளர்கள் மீது காவல் நிலையத்தில் புகார்
திருப்பத்தூர் மாவட்டம் பூர்விகா மொபைல் ஷோரூமின் பணியாளர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலை அத்தனாவூர் பகுதியைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் (36) இவர் கடந்த 22.5.24 ஆம் தேதி திருப்பத்தூரில் உள்ள பூர்விகா மொபைல் ஷோரூமில் 46,000 மதிப்பில் சாம்சங் மொபைல் வாங்கியுள்ளார். அப்போது அந்த ஷோரூமின் பணியாளர்கள் இந்த மொபைலை தண்ணீரில் போட்டாலும் எதுவும் ஆகாது என்று கூறி விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அந்த மொபைலின் மீது டம்ளரில் இருந்த தண்ணீர் சிந்தி மொபைல் பழுதானதாக கூறப்படுகிறது. மேலும் இந்த மொபைலுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் வாரன்டி உள்ளது எனவே இதுகுறித்து ஜெயபிரகாஷ் மொபைல் ஷோரூமில் வந்து கேட்டபோது முறையான பதில் அளிக்காமல் ஆணவமாக பேசியதாக தெரிகிறது இதனால் ஆத்திரம் அடைந்த ஜெயப்பிரகாஷ் திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் ஷோரூமின் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் மேலும் புதிய மொபைலை பெற்று தரும் மாறும் புகார் அளித்தார்.
Next Story