தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்ட முதல்வர் மருந்தகம் மாவட்ட ஆட்சியர் தகவல்.

X

நாமக்கல் மாவட்டத்தில் முதல்வர் மருந்தகங்களில் 13.03.2025 வரை ரூ.1.33 இலட்சம் மதிப்பிலான மருந்து , மாத்திரைகள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, தகவல்.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் முதல்வர் மருந்தகத்தில் மாவட்ட ஆட்சியர் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடம் மருந்துகளின் விலை மற்றும் மருந்தகத்தின் பயன் குறித்து கலந்துரையாடினார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் கூட்டுறவுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மக்களுக்கு பொது மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் கிடைக்க செய்யும் வகையில் “முதல்வர் மருந்தகம்” என்ற புதிய திட்டம் மூலம் முதற்கட்டமாக தமிழ்நாடு முழுவதும் 1000 மருந்தகங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை மூலம் 17 முதல்வர் மருந்தகங்களும், தொழில் முனைவோர்கள் மூலம் 10 முதல்வர் மருந்தகங்களும் என மொத்தம் 27 முதல்வர் மருந்தகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. முதல்வர் மருந்தகங்களில் பொதுமக்களுக்கு 25 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும். இதன்மூலம் தனியார் மருத்துவமனை/ மருந்தகங்களுக்கு செல்லும் பொதுமக்கள் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளுக்கான மருந்துகளை குறைந்த விலையில் முதல்வர் மருந்தகங்களிலிருந்து வாங்கி பயன் பெற முடியும். ஜெனிரிக் மருந்துகள், பிராண்டட் மருந்துகள், சர்ஜிக்கல், நியுட்ராசூட்டிகல்ஸ் மற்றும் இந்திய மருந்துகள் உள்ளிட்ட மருந்துகள் 1000 முதல்வர் மருந்தகங்களில் பொது மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கும் வகையில் தொடங்கப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 27 மருந்தகங்களில் 13.03.2025 வரை ரூ.1.33 இலட்சம் மதிப்பில் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. முன்னதாக, சேந்தமங்கலத்தில் கடைகளில் நெகிழி பயன்பாடுகள் குறித்தும், காரவள்ளியில் சமுதாய கூடம் அமைபதற்கான இடம் தேர்வு செய்வது குறித்தும், கிருஷ்ணாபுரத்தில் குழந்தைகள் அங்கன்வாடி மையத்திலும் ஆய்வு மேற்கொண்டார்.
Next Story