சேதுபாவாசத்திரம், பட்டுக்கோட்டை ஒன்றியத்தில் காரல் மார்க்ஸ் நினைவு தினக் கொடியேற்று நிகழ்ச்சி

X

கொடியேற்று நிகழ்ச்சி
தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில், மாமேதை கார்ல மார்க்ஸ் நிநினைவு தினக் கொடியேற்று நிகழ்ச்சி வெள்ளிக்கிழமையன்று ஒன்றியச் செயலாளர் வி.ஆர்.கே.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், மூத்த தோழர் வீ.கருப்பையா ஆகியோர் பங்கேற்று , சேதுபாவாசத்திரம், காரங்குடா, கழுமங்குடா, செந்தலைப்பட்டினம், பூவாணம் ஆகிய கிளைகளில் செங்கொடி ஏற்றினர். தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்திய மாநாட்டு விளக்க தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. பூவாணம் கிளையின் சார்பில், அகில இந்திய மாநாட்டு நிதியாக ரூபாய் 7 ஆயிரத்து 500 மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரனிடம் வழங்கப்பட்டது. நிகழ்வில், ஒன்றியக்குழு உறுப்பினர் நவநேசன், கிளைச் செயலாளர் எழிலரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பட்டுக்கோட்டை தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ஒன்றியம் வீரக்குறிச்சி கிளையில் மாமேதை காரல் மார்க்ஸ் நினைவு தினக் கொடியேற்று நிகழ்ச்சி, ஒன்றியக்குழு உறுப்பினர் கே.பெஞ்சமின் தலைமையில் நடைபெற்றது. மூத்த தோழர் பி.பக்கிரிசாமி கட்சிக் கொடியேற்றி வைத்தார். கிளைச் செயலாளர் ஏ.சூசைராஜ், பாக்கியம், ஆசீர்வாதம், ஜெயக்கொடி, மாதர் சங்கம் ரெஜினா மேரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story