மூன்றாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை : போக்சோ வழக்கில் இளைஞர் கைது 

மூன்றாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை : போக்சோ வழக்கில் இளைஞர் கைது 
X
கைது
தஞ்சை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த மூன்றாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த வாலிபரை வல்லம் அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ வழக்கில் கைது செய்தனர். தஞ்சாவூர் அருகே ஒரு கிராமப் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி என்பவரின் மகன் கண்ணன் (30). இவர் கடந்த 11 ஆம் தேதி தனது பைக்கில் வந்துள்ளார். அப்போது அப்பகுதியில் நின்றிருந்த  மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவியை  தனது பைக்கில் பள்ளியில் இறக்கி விடுவதாக கூறி அழைத்து வந்துள்ளார். பின்னர் பள்ளிக்கு செல்லாமல் அப்பகுதியில் இருந்த காட்டுப்பகுதிக்கு சிறுமியை அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி தன் பெற்றோரிடம் தகவல் தெரிவித்தார். தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதன் பேரில் காவல்துறையினர் கண்ணனை பிடித்து விசாரணை செய்தபோது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்தது உறுதியானது. இதையடுத்து வல்லம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர்  ராஜேஸ்வரி மற்றும் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர்.
Next Story