கன்னியாகுமரி கண்ணாடி இழை தரைத்தள பாலம் - கலெக்டர் ஆய்வு 

கன்னியாகுமரி கண்ணாடி இழை தரைத்தள பாலம் - கலெக்டர் ஆய்வு 
X
அதிகாரிகள் பங்கேற்பு
கன்னியாகுமரி மாவட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை முதல் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் வரை சுற்றுலா பயணிகள் நடந்து செல்வதற்கு ஏதுவாக அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழை தரைத்தள பாலத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் தஅழகுமீனாள் இன்று (14.03.2025) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.         மேலும் அவர் கூறுகையில் :- கண்ணாடி இழைப்பாலத்தில் அழகுப்படுத்த துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தியதன் அடிப்படையில் தற்போது கண்ணாடி இழைப்பாலத்தில் நடைபெற்று வரும் பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின் படி கண்ணாடி இழைதரைத்தள பாலம் உலகளவில் மேம்படுத்தப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.         கண்ணாடி தரைத்தளபாலத்தில் நடைபெற்று வரும் சிற்பங்கள் அமைக்கும் பணி, அலங்கார மின்விளக்குகள் அமைக்கும் பணி, திருவள்ளுவர் சிலையினை மேம்படுத்தும் பணிகள் உள்ளிட்டவைகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இப்பணிகளை விரைந்து முடித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. என கூறினார்.       நடைபெற்ற ஆய்வில் நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளர் சத்திய மூர்த்தி, துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
Next Story