சிறப்பு அலங்காரத்தில் நன்செய் இடையாறு மாரியம்மன்.

X

சிறப்பு அலங்காரத்தில் நன்செய் இடையாறு மாரியம்மன்
பரமத்தி வேலூர், மார்ச்.14: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள நன்செய் இடையார் மகா மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கம்பம் நடுவிழாவுடன் துவங்கியது. மார்ச் 23ஆம் தேதி வடிசோறு நிகழ்ச்சியும், 24 ஆம் தேதி தீமிதி விழாவும் நடைபெறுகிறது. இந்த நிலையில் அம்மனுக்கு தினந்தோறும் பல்வேறு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. இன்று நடைபெற்ற சிறப்பு பூஜையில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை நடைபெற்றது. இதில் நன்செய் இடையா சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
Next Story