ஜேடர்பாளையத்துக்கு காலை நேரத்தில் அரசு பஸ் இயக்க கோரிக்கை

X

ஜேடர்பாளையத்துக்கு காலை நேரத்தில் அரசு பஸ் இயக்க கோரிக்கை.
பரமத்தி வேலூர், மார்ச்.14: நாமக்கல் மாவட்டம் ப.வேலூர்பஸ்ஸ்டாண்டில் இருந்து தினமும் காலை 8.15 மணிக்கு பொத்தனூர், பாண்டமங்கலம் வழியாக ஜேடர்பாளையத்துக்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது. அந்த பஸ்சில் ஏராளமான பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவியர் மற்றும் வேலைக்கு செல்வோர் பயணிக்கின்றனர். காலையில் 8.15 மணிக்கு அரசு பஸ்சைதவறவிட் டால் இரண்டு மணி நேரம் கழித்து 10.15 மணிக்கு இயக்கப்படும் அரசு பஸ்ஸில் தான் செல்ல வேண்டும். கடந்த சில மாதங்களுக்கு முன்கூடுதலாக அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன. அவை திடீரென நிறுத்தப்பட்டதால் சரியான நேரத்துக்கு செல்ல முடியாமல் மாணவர்கள், பணியாளர்கள் தவிக்கின்றனர். மேலும் ஜேடர் பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வெல் லம்தயாரிக்கும் ஆலை, கட்டிட பணிக்கு வேலைக்கு செல்லும் கூலி தொழிலாளர்கள் மிகவும் பாதிப்படை கின்றனர். கடந்த சில மாதங்களாக ஜேடர்பாளையம் வழித்தடத்தில் இயங்கும் அரசு பஸ்கள் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. எனவே காலை 9 மணிக்கு பின்னர் அடுத்தடுத்து ஜேடர்பாளையத்துக்கு அரசு பஸ்கள் இயக்க வேண்டும். மேலும் காலை 9 மணிக்கு வெங்கரை செல்லும் அரசு பஸ்சை ஜேடர்பாளையம் வரை நீட்டித்து இயக்க வேண்டும். எனமாணவ, மாணவியர்மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story