தேசிய தடகள போட்டி : பெண் உதவி ஆய்வாளருக்கு எஸ் பி வாழ்த்து

தேசிய தடகள போட்டி : பெண் உதவி ஆய்வாளருக்கு எஸ் பி வாழ்த்து
X
நாகர்கோவில்
கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடைபெற்ற இந்திய முதுநிலை தடகள கூட்டமைப்பு நடத்திய இந்திய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு 2000 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் முதல் பரிசு, 400 மீட்டர் தடை ஓட்டத்தில் இரண்டாம் பரிசு, 100 மீட்டர் தடை ஓட்டம் இரண்டாம் பரிசு மற்றும் 400 மீட்டர் தொடர் ஓட்டம் இரண்டாம் பரிசு போன்றவற்றை நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கீதா என்பவர் பெற்றார்.       தேசிய அளவில் குமரி காவல் துறைக்கு  பெருமை சேர்த்த எஸ் ஐ  கீதாவை குமரி  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். இரா. ஸ்டாலின்  நேரில் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
Next Story