விழிப்புணர்வு பேரணி

X
ஈரோட்டில் உலக சிறுநீரக தினத்தையொட்டி ஆர்ஏஎன்எம் கிட்னி கேர் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு ஆர்ஏஎன்எம் கிட்னி கேர் மருத்துவமனை சிறுநீரக சிறப்பு மருத்துவர் டாக்டர் நாகேந்திரன் தலைமை தாங்கினார். ஈரோடு ஹார்மோரா சர்க்கரை தைராய்டு உடற்பருமன் சிகிச்சை மையம் சிறப்பு மருத்துவர் டாக்டர் பிரியதர்ஷினி முன்னிலை வகித்தார். பேரணியை ஈரோடு மாவட்ட முதன்மை நீதிபதி முருகேசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியானது, ஈரோடு சம்பத் நகரில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் தொடங்கி, சம்பத் நகர் சாலை வழியாக ஆர்ஏஎன்எம் கிட்னி கேர் மருத்துவமனையில் நிறைவடைந்தது. பேரணியில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ஸ்ரீவித்யா, மாவட்ட நீதிபதிகள், ஐஎம்ஏ நிர்வாகிகள் டாக்டர் பார்த்திபன், செயலாளர் நந்தகுமார், ஆர்ஏஎன்எம் கிட்னி கேர் மருத்துவமனை மருத்துவர்கள், ஊழியர்கள், நந்தா அலைடு ஹெல்த் அண்ட் சயின்ஸ் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

