மகளிர் சுய உதவிக்குழுக்களின் தயாரிப்பு பொருட்களை சந்தைப்படுத்தும் வர்த்தக நிபுணர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது

X
விருதுநகர் சரஸ்வதி கிராண்;ட் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், மகளிர் சுய உதவிக்குழுக்களின் தயாரிப்பு பொருட்களை சந்தைப்படுத்தும் வர்த்தக நிபுணர்கள் (வாங்குவோர் மற்றும் விற்போர்) சந்திப்பு நிகழச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: விருதுநகர் மாவட்டத்தில், ஏறத்தாழ 1,20,000 பெண்கள் மகளிர் சுயஉதவிக்குழுக்களில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அதில் 80,000 பெண்கள் ஏதாவது ஒரு வகையில் சிறு தொழிலோ அல்லது வருமானம் ஈட்டக்கூடிய ஒரு பணியிலே இருக்கக்கூடிய ஒரு சூழலை நாம் பார்க்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் சுமார் ரூ.9000 கோடி கடனாக பெற்று இருக்கிறார்கள். இதள் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் கடனை பெற்று சிறு தொழில்களை செய்வதற்கும் அதிகமான தொழில் மையங்களை உருவாக்கி கொள்ளமுடியும். தினசரி பயன்பாட்டிற்காக ஒவ்வொரு நாட்களும் நாம் செலவழித்து வாங்ககூடிய பொருட்களையும், தரமான பொருட்களையும் மகளிர் சுய உதவிக்குழுக்களே உற்பத்தி செய்து வருகிறது. தரமான மற்றும் ஆரோக்கியமான உணவுகள், மசாலா பொருட்கள் மற்றும் குழந்தைகளுக்கு செய்யக்கூடிய பொருட்களை மிகவும் துரிதமாக செய்து விற்பனை செய்கின்றனர். எனவே மகளிர் சுயஉதவிகுழுக்கள் மூலம் தயாரிக்கப்படும் உணவுகளை மக்கள் அதிகம் விரும்பி வாங்கும் அளவிற்கு நீங்கள் உங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். உணவு சார்ந்த தொழில் நுட்பங்கள், பதப்படுத்தப்படும் உணவுகளை ஆரோக்கியமான வழிமுறைகளை நீங்கள் அனைவரும் கையாள வேண்டும். மேலும், ஒவ்வொரு கிராமத்தில் இருக்கக்கூடிய அரசு கட்டடங்கள் மற்றும் சுயஉதவிக்குழுக்கள் கட்டடங்கள், பயன்படுத்தப்படாத கட்டடங்களை தற்காலிகமாக சுயஉதவிக்குழுக்களுக்கு அதனுடைய பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும். இதன் மூலம் நமது மாவட்டத்தில் அனைத்து மகளிர் சுயஉதவி குழுவில் உள்ள பெண்கள் தொழில் வாய்பபை உருவாக்கி கொள்ளவேண்டும். நாம் ஒரு பொருட்களை உற்பத்தி செய்வது என்பது எளிது . ஆனால் அவற்றை முறையாக சந்தைப்படுத்துவது என்பது மிகவும் கடினமாகும். அதற்காக தான் சந்தைப்படுத்துதல் குறித்து தொடர்ச்சியாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. எனவே, நம்முடைய குறைந்தபட்ச இலக்கு என்பது ஒவ்வொரு பெண்ணும் சுய தொழில் செய்து மாதம் ரூ.20 ஆயிரம் பெறக்கூடிய அளவிற்கு இலாபம் ஈட்டக்கூடிய அளவிற்கு வரவேண்டும். பெண்களுக்கான சுதந்திரம் என்பது அவர்களின் பொருளாதார வலிமைதான். தனது கையில் இருக்கும் பணத்தை தானே செலவு செய்வதற்கும், தனது குடும்பத்திற்கு செலவு செய்வதற்கும் மற்றும் தனக்கு விருப்பமானவற்றை வாங்குவதற்கும் அவர்களுக்கு அந்த பணத்தின் மீது செல்வாக்கு இருக்க வேண்டும். அதற்கு பெண்கள் அனைவரும் பொருளாhர வலிமை பெற்றவர்களாக உருவாக வேண்டும் எனவும், அதற்கு இருக்கக்கூடிய அரசினுடைய திட்டங்கள், பயிற்சிகளை நீங்கள் முறையாக பயன்படுத்திக்கொண்டு, பாரதி கண்ட புதுமை பெண்ணாக, அனைத்து தொழில் வாய்ப்புகளையும் பெற்று பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும். அதற்கு தான் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது இதற்காக தான் மகளிர் மேமம்மபாட்டு துறையும் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார். மேலும், இந்நிகழ்ச்சியில், 68 சுய உதவிக்குழுக்கள் 150 -ற்கும் மேற்பட்ட தங்களின் உடைய தயாரிப்பு பொருட்களை காட்சிப்படுத்தியிருந்தனர். விவசாயம் சார்ந்த பொருட்களான மல்லி, வத்தல், மக்களாச்சோளம், பயறு வகைகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் கடன் பெற்று ஆடு, கோழி, காடை மற்றும் மீன் வளர்ப்பு ஆகிய தொழிலில் ஈடுபட்டுள்ளதால் இந்நிகழ்வில் ஆடு, கோழி, காடை மற்றும் மீன் வளர்ப்பு ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும், கொள்முதலாளர்களுக்கும் முதற்கட்டமாக 28 புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
Next Story

