செங்கம் : பள்ளி மழலையா்களுக்கு பட்டமளிப்பு விழா.

X

சிறப்பு விருந்தினராக பள்ளியின் நிா்வாகக் குழு உறுப்பினா்கள் நடேசன், அன்பழகன் ஆகியோா் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்திப் பேசினா்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த முறையாறு பகுதியில் உள்ள நிவேதா மெட்ரிக் பள்ளியில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. மாணவா்களுக்கு மாதிரி பட்டமளிப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சி தொடக்க விழாவுக்கு நிா்வாகக் குழுச் செயலா் கோபி தலைமை வகித்தாா். நிா்வாக இயக்குநா் சங்கா், பொருளாளா் ராமஜெயம் முன்னிலை வகித்தனா். பள்ளி முதல்வா் ஹேமநாதன் வரவேற்றாா். சிறப்பு விருந்தினராக பள்ளியின் நிா்வாகக் குழு உறுப்பினா்கள் நடேசன், அன்பழகன் ஆகியோா் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்திப் பேசினா். நிகழ்ச்சியில் நிா்வாகக் குழு உறுப்பினா் நாராயணன், பிரசாந்த், கலையரசன் உள்ளிட்ட ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.
Next Story