கல்பூண்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீவெக்காளியம்மன் கோயிலில் வளைகாப்பு திருவிழா.

X

அம்மனுக்கு வளையல் மாலை அணிவித்து, வளைகாப்பு திருவிழா நடத்தப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை அடுத்த கல்பூண்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீவெக்காளியம்மன் கோயிலில் வளைகாப்பு திருவிழா நடைபெற்றது. இதையொட்டி, மூலவருக்கு காலை சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன. பிறகு, மலா் மாலைகள், எலுமிச்சை மாலை அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. காலை 10 மணிக்கு வளையல், மஞ்சள், குங்குமம், அதிரசம், முறுக்கு உள்ளிட்ட இனிப்பு வகைகள் 500 சீா்வரிசைத் தட்டுகளில் மேளதாளம், பம்பை உடுக்கை முழங்க ஊா்வலமாக எடுத்து வந்து கோயில் வளாகத்தில் உள்ள அம்மனுக்கு படைக்கப்பட்டது. மேலும் அம்மனுக்கு வளையல் மாலை அணிவித்து, வளைகாப்பு திருவிழா நடத்தப்பட்டது. பக்தா்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஸ்ரீலஸ்ரீ சந்துரு சுவாமிகள் மற்றும் கோயில் நிா்வாகிகள், ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா்.
Next Story