சேவை மையத்தை திடீர் ஆய்வு செய்த ஆட்சியர்.

X

திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செயல்படும் “சகி” பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தினை திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு.
திருவாரூர் மாவட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் பெண்களின் நலனுக்கான ‘சகி’ என்ற பெயரில் பெண்களுக்கான ஒருங்கிணைந்த மையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வ.மோகனச்சந்திரன் திடீர் ஆய்வு மேற்கொண்டு இம்மையத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள மீட்பு சேவைகள் மற்றும் அவசர நடவடிக்கைகள் குறித்தும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சேகைள் குறித்தும், தேவைப்படும் பட்சத்தில் பாதிக்கப்படும் பெண்களுக்கு அவர்களின் ஒப்புதலின்படி காவல்துறை உதவியுடன் முதல் கட்ட தகவல் அறிக்கை மற்றும் சிஎஸ்ஆர் முதலிய வழங்கிய விவரங்கள் குறித்தும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அவர்களின் மனநிலைக்கு ஏற்றவாறு உளவியால் ரீதியாக ஆலோசனை மற்றும் உதவிகள் வழங்கிய விவரங்கள் குறித்தும், மகளிர் உதவி எண் மூலம் பெறப்பட்ட புகார் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றியும் கேட்டறிந்தார்கள். இந்நிகழ்வில், RSETI-யில் பயிற்சி மைய இயக்குநர் கணேஷ், சகி மைய நிர்வாகி மற்றும் மைய பணியாளர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
Next Story